ஆன்மிகம் மனிதனுடைய வாழக்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றுகிறது . ஆன்மீகம் என்பது மனிதனின் வாழக்கையில் தோன்றும் புதிர்களுக்கு தீர்வு கொடுத்து உண்மையான பக்தியும், நம்பிக்கையும் வளர்க்கிறது . ஆன்மீகமானது மனிதனுடைய வாழ்க்கையில் பரவசத்தை கொடுக்கிறது .
ஒரு கட்டிடம் வலிமையாக நிற்பதற்கு அதனுடைய அடித்தளத்தை வலிமையாக அமைக்க நேரிடுகிறது . அதுபோல மனிதனின் வாழ்க்கையில் புத்துணர்ச்சியும் , தெம்பும் பெறுவதற்கு அவனுள்ளே புதைந்து கிடைக்கும் ஆன்மீகம் வளர வேண்டும். புத்துணர்ச்சி நிறைந்த வாழ்க்கை மனிதனின் வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றி அதனுடைய ஆழ்ந்த நோக்கத்தை புரியவைக்கிறது. நாம் எதற்கு வாழ்கிறோம் என்று புரியாமல் வாழ்க்கை வாழ்வது நடுக்கடலில் படகு ஒன்று திசை மாறி மேல செல்ல முடியாமல் தவிப்பது போலிருக்கிறது . ஆன்மீகமானது வாழ்க்கையின் பாதையை மனிதனுக்கு உணர்த்துகிறது . மனிதனை கடவுளோடு இணைக்கிறது . ஆன்மீகம் மனிதனின் வாழக்கையை நம்பிக்கையோடு மாற்றி அமைப்பதில் பெரிதும் உதவுகிறது.
ஆன்மீகத்தால் மனிதன் முழுமையான வாழக்கையை அடைகிறான். மனிதனுக்குள்ளே ஆன்மீகம் வளர வளர அவனது வாழ்க்கையும் தூய்மை பெறுகிறது. மனிதனுக்கும் கடவுளுக்குமிடையே உள்ள ஒரு உறவை வளர்க்கிறது . கடவுளோடு இணைந்துக் கொண்ட மனிதன், அனைத்து மனித குலத்தொடும் உறவை வளர்த்துக் கொள்கிறான் . ஆன்மீகமானது மனிதனை அனைத்து ஜீவன்களையும், பூமியின் இயற்க்கை வளத்தையும் நேசிக்க வைக்கிறது.
ஆன்மீகம் மனிதனுக்குள்ளே மிதந்து கொண்டிருக்கும் அகம்பாவம், ஆணவம் போன்ற குணங்களை அழித்து விடுகிறது . அவனுக்குள்ளே அன்பையும், பரிவையும் நிரப்புகிறது. ஆன்மீகம் மனிதனை மனிதாபிமானம் நிறைந்த மனிதனாக மாற்றுகிறது .
ஆன்மீகத்தை கடைபிடிப்பதற்கு எந்தவிதமான சாதனையோ அல்லது தனிபயிற்சியோ செய்ய அவசியமில்லை . மனிதன் கடவுளிடம் கொண்ட மதிப்பும், உயர்வும் அதிகரித்து அவனுள்ளே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது . அதையே ஆன்மீகம் என்று சொல்லலாம் . இந்த விழிப்புனர்சியே அவனை பெரிய ஞானியாக மாற்றுகிறது. ஞானியானவன் தெளிவான சிந்தனையை அறிவுரையின் மூலம் மக்களுக்கு போதிக்கிறான் . ஞானம் நிறைந்த மனிதன் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையே நிலவி வரும் வேறுபாட்டை அழிக்கிறான் . ஞானம் நிறைந்த மனிதன் எந்த மதம் மனிதகுலத்தை அழிக்க முற்படுகிறதோ அந்த மதத்தை மக்களிடையே பரப்புவதற்கு ஒரு பொழுதும் முயற்சி எடுத்துக் கொள்ளமாட்டான். மதமும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று மக்களுக்கு உணர்த்துகிறான் .
நமக்குள்ளே இருக்கும் தனிமையை அழித்து மக்களோடு மக்களாக இணைந்து அன்பை பொழிந்து, உறவுகளை வளர்த்து கடைசியில் கடவுளை அடைவது தான் தலைசிறந்த மதத்தின் அடையாளம் . ஞானம் நிறைந்தவனும் இந்த சாரத்தை போதிக்கிறான் , ஆன்மீகத்தை மக்களிடையே வளர்க்கிறான், நல்ல எண்ணங்களுக்கு விதை விதைக்கிறான் . ஆன்மீகம் மனிதன் தழைப்பதற்கு ஒரு ஊன்று கோலாக அமைகிறது . ஆன்மீகம் நிறைந்தவன் எந்த கடினமான பிரச்சனைக்கும் தெளிவான சிந்தனையோடு அமைதியான வழியிலே தீர்வு கொள்கிறான் .
ஆன்மீகம் விஞ்ஞானத்தையும் வளரச் செய்கிறது . விஞ்ஞானத்தோடு சமூக வளர்ச்சியும் பெறுகிறது . சமூக வளர்ச்சி என்பது மனிதனின் வாழ்க்கையோடு இணைந்தது என்று சொல்லலாம் . அவனது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைக்கிறது .
புரிந்தும் புரியாத வாழ்க்கை வாழ்வதை விட வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்து கொண்டு வழிநடத்தி செல்லுபவன் தான் வாழ்க்கையின் உன்னதமான நோக்கத்தை புரிந்து கொள்கிறான் . ஆன்மீகம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை தெரியபடுத்துகிறது . வாழ்க்கையின் சிறப்பான சாரத்தை அறிய வைக்கிறது . இதை அறிந்து வாழ்பவன் தான் முழுமையான வாழ்க்கையை வாழ்க்கிறான் . நமக்குள்ளே பிறக்கும் பல கேள்விகளுக்கு இந்த ஆன்மீகம் தான் பதில் கொடுக்கிறது . நமக்குள்ளே இருக்கும் ஆன்மாவை கேட்டால் ஆன்மீகத்தின் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் .
Saturday, May 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment